ஐந்து வகை அரிய மூலிகைகளால் ஆனதே நமது பச்சிலை மூலிகை மருந்து ஆகும். இந்த ஐந்து வகை சக்திவாய்ந்த அரிய மூலிகைகளை கொல்லிமலை சென்று பறித்து அதில் நல்ல தரமான மூலிகைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, சுத்தமான நீரில் கழுவி, உரலில் இடித்து, பக்குவமாய் அம்மியில் அரைத்து, சரியான கலவையில் தரமாக இந்த மருந்தினை தயாரிக்கின்றோம். இவ்வாறு உருவான மருந்தினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆட்டுப்பாலில் கலந்து காமாலை மற்றும் கல்லீரல் நோயுற்றவர்களுக்கு குடிக்க கொடுத்து குணப்படுத்தி வருகின்றோம்.
பச்சைப் பசும்பால் (அ) பாக்கெட் பால் 25 மி.லிட்டரில், தண்ணீர் 50 மி.லிட்டர் கலந்து அதில் நமது பச்சிலை மூலிகை மருந்தில் ஒரு உருண்டையை கலந்தவுடன் உடனடியாக குடிக்க வேண்டும் இல்லையெனில் மருந்து வீணாகிவிடும். மேலும் பச்சிலை மூலிகை மருந்து குடித்த உடனே தண்ணீர் அருந்த கூடாது. 15 நிமிடங்கள் கழித்து வேண்டுமென்றால் டீ, காபி குடிக்கலாம்.