ஸ்ரீ வைத்தீஸ்வரன் துணை
உணவு முறைகள் ( பத்தியம் )

      மருந்து குடிக்கும் அன்று நமது வீட்டு பாத்திரத்திலேயே பச்சரிசி சாதம் செய்து பாசிப்பருப்பு, உப்பு, மிளகாய் வைத்து சாம்பார் செய்து புளி சேர்க்காமல், தாளிக்காமல் கொடுக்கவும். இவ்வாறு சாப்பாடு சாப்பிட முடியாவிட்டால், அரிசியை வறுத்து கஞ்சி வைத்து குடிக்கவும். அன்று ஒரு நாள் மட்டும் மேற்படி உணவைத்தவிர வேறு உணவு எதுவும் சாப்பிடக்கூடாது. இளநீர், மோர், ஜீஸ் வகைகள் அன்று ஒரு நாள் குடிக்ககூடாது.

அடுத்த நாள்

      காலையில் ஓமம் 10 கிராம் வாங்கி அரைத்து தலைக்கு தேய்த்து சுடு தண்ணீரில் பச்சை தண்ணீர் கலக்காமல் குளிக்கவும். பிறகு புளுங்கல் அரிசி சாதம் செய்து துவரம் பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வைத்து சாம்பார் செய்து ஒரு வேளை மட்டும் தாளிக்காமல் சாப்பிடவும். மதியத்திற்கு மேல் பத்தியம் இல்லை. பிறகு வழக்கம் போல் எல்லாமே தாளித்து, உப்பு, புளி, காரம் நன்றாக வைத்து சாப்பிட வேண்டும். அதன்பிறகு உப்பு, புளி, காரத்தை எப்பொழுதும் குறைத்து சாப்பிடக் கூடாது.

அதிகம் சாப்பிடவேண்டியது

மருந்து சாப்பிட்டதற்கு அடுத்த நாளிலிருந்து

காய் வகைகள்

சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்ற அதிக நீர் சத்துள்ள காய்கறிகள் சாப்பிட வேண்டும்.

பழங்கள் மற்றும்

இளநீர், மோர், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, சப்போட்டா.

ஜீஸ் வகைகள்

கரும்பு ஜீஸ், தர்பூசணி, வெள்ளரிபிஞ்சு பழமாகவோ (அ) ஜீஸ் ஆகவோ குடிக்கலாம். ஜீஸ் ஆக குடிக்கும்போது ஐஸ் போடாமல் குடிக்கவும்.

உணவு வகைகள்

சாப்பாடு, சாம்பார், கீரைகள், புளிரசம் அதிகம் எடுத்துக் கொள்ளவும். லெமன் சாதம், தக்காளி சாதம், புதினா சாதம், புதினா சட்னி, சாம்பார் சாதம், தேங்காய் சாதம், உப்புமா, பொங்கல், பூரி, சப்பாத்தி. உப்பு தேவையான அளவு சேர்க்க வேண்டும். புளி, காரம் நன்றாக உரைக்கும் அளவிற்கு சேர்த்து உணவு கொடுக்க வேண்டும். நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயில் மட்டுமே சமைக்க வேண்டும். டீ, காபி சாப்பிடலாம்

15 நாள் சாப்பிடக்கூடாதது

கீழ்கண்ட உணவுகள் சாப்பிடக்கூடாதவைகள்

பால் பொருட்கள்

பால், நெய், தயிர், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா.

காய்கறிகள்

கேரட், பீட்ரூட், பூசணி, சிவப்பு முள்ளங்கி

பழங்கள்

ஆப்பிள், பலாப்பழம், சீத்தாப்பழம், மொந்தை வாழைப்பழம்.

உணவுகள்

இட்லி, தோசை, வடை, உளுத்தம்பருப்பு, புரோட்டா, கறி, மீன், முட்டை, கோழி, கருவாடு, பாமாயில், ரிபைண்ட் ஆயில், பானி பூரி, ஐஸ் கிரீம், எண்ணெய் பலகாரங்கள், துரித உணவுகள்.

குளிர்பானங்கள்

பாட்டிலில் அடைக்கப்பட்ட செயற்கை நிறமூட்டிகள், கெமிக்கல் கலந்த குளிர்பானங்கள்

கீரைகள்

கீழாநெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, அகத்திக்கீரை, பசலைக்கீரை, பண்ணைக்கீரை

செய்ய வேண்டியவை

      காமாலை மற்றும் கல்லீரல் நோய்கள் தவிர வாந்தி, பேதி, தலைவலி, சளி, இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற மற்ற எல்லாவிதமான நோய்களுக்கும் அலோபதி மாத்திரைகள், ஊசிகள் போட்டுக் கொள்ளலாம். பக்க விளைவுகள் கிடையாது. நல்ல ஓய்வு எடுத்தல் அவசியம்.

செய்ய கூடாதவை

      நல்லெண்ணெயை தேய்த்துக் குளிக்கக் கூடாது, உடற்பயிற்சி, தியானம், யோகாசனம், நடைபயிற்சி, விளையாடுதல் போன்றவை செய்யக்கூடாது.