சேலம் மாவட்டத்தில் ஏற்காடு போகும் வழியில் உள்ள சின்னக்கொல்லப்பட்டி எனும் கிராமத்தில் எங்கள் வைத்தியசாலை அமைந்துள்ளது. மேலும் சேலம் சட்டக் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகில் வினைத்தீர்த்தா கவுண்டர் காமாலை வைத்தியசாலையுடன் கூடிய மூலிகை பண்ணையும் அமைந்துள்ளது. சேலத்தில் பச்சிலை மூலிகை மருந்து வாங்க வருபவர்கள் சின்னக்கொல்லப்பட்டியில் உள்ள வீனைத்தீர்த்தா கவுண்டர் ஐயா அவர்கள் தொன்றுதொட்டு மருந்து கொடுத்து வசித்து வந்த பழைய வீட்டிலோ
(அ)
சேலம் சட்டக் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகில் மாயம்மா கோவிலை தாண்டி உள்ள வினைத்தீர்த்தா கவுண்டர் காமாலை வைத்தியசாலையுடன் கூடிய மூலிகை பண்ணையிலோ வாங்க வேண்டும். எங்களது பச்சிலை மூலிகை மருந்தை மேற்கூறிய இரு இடங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த இரு இடங்களைத் தவிர சேலத்தில் வேறெங்கும் எங்களுக்கு கிளைகள் கிடையாது. நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவில் அருகே நமது கிளை உள்ளது.
சேலத்தில் மேற்படி வைத்தியரின் பெயர் மற்றும் பத்திய முறைகளை பயன்படுத்தி போலி வைத்தியர்கள் கூப்பிடுவார்கள், கையை பிடித்து இழுப்பார்கள், ஏமாற வேண்டாம். எம்.சிவக்குமார் , மற்றும் வைத்தியர் சாந்தி சிவக்குமார் என கேட்டு வரவும்.
வருவதற்கு முன் தொலைபேசி மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அப்பாயிண்மென்ட் பெற்று வரவும்.